×

பலத்த மழை, வரத்து குறைவு எதிரொலி சென்னையில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு

* கேரட், சின்ன வெங்காயம் விலை ஏகிறியது* மழை தொடர்ந்தால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புசென்னை: பலத்த மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி, கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்தால் காய்கறி விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால், சென்னை மழையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், தொடர் கன மழையால் தமிழகம் முழுவதும் காய்கறி, பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் போக்குவரத்து பாதிப்பால் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காய்கறி விலை கடுமையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தினசரி 350 லாரிகளில் காய்கறி வருவது வழக்கம். மழையால் தற்போது காய்கறி வரத்து அடியோடு குறைந்துள்ளது. தற்போது வெறும் 150 லாரிகளில் மட்டுமே காய்கறி வந்து கொண்டிருக்கிறது. வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வரத்து வெகுவாக குறைந்து இன்னும் காய்கறி விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை உயர்வு. இதனை வாங்கி சில்லறை மார்க்கெட்டில் விற்பவர்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகமாக விற்கின்றனர். சில பகுதிகளில் ஏரியாக்களில் தகுந்தார்போல் விலை அதிகரித்து விற்பதாக கூறப்படுகிறது. தக்காளி சில இடங்களில் ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் ரூ.80க்கு விற்கப்பட்டது. காய்கறி விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.எண்ணிக்கை    காய்கறி    பழையவிலை    புது விலை 1 கிலோ    தக்காளி    ரூ.30    ரூ.70,ரூ.801 கிலோ    பீன்ஸ்    ரூ.40    ரூ.701 கிலோ    கேரட்    ரூ.60    ரூ.901 கிலோ    பீட்ரூட்    ரூ.20    ரூ.351 கிலோ    நூக்கல்    ரூ.25    ரூ.401 கிலோ    ப.பட்டாணி    ரூ.110    ரூ.1401 கிலோ    உருளைக்கிழங்கு    ரூ.20    ரூ.351 கிலோ    வெண்டை    ரூ.20    ரூ.301 கிலோ    அவரை    ரூ.30    ரூ.501 கிலோ    பாகற்காய்    ரூ.35    ரூ.551 கிலோ    கத்தரிக்காய்    ரூ.25    ரூ.401 கிலோ    சேனைக்கிழங்கு    ரூ.15    ரூ.301 கிலோ    சேப்பங்கிழங்கு    ரூ.25    ரூ.401 கிலோ    இஞ்சி    ரூ.60    ரூ.801 கிலோ    முருங்கைக்காய்    ரூ.40    ரூ.701 கிலோ    சின்னவெங்காயம்    ரூ.30    ரூ.701 கிலோ    பெரிய வெங்காயம்    ரூ.30    ரூ.40…

The post பலத்த மழை, வரத்து குறைவு எதிரொலி சென்னையில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Kidu ,Kidu ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...